ஆதிசைவசமயாச்சாரியார் மற்றும் ஆதிசைவாச்சாரியார் என்பவர்கள் சைவ சமய உபதேச குருவாக கருதப்படுபவர்கள். அவ்வாறு கருதப்படுவதால் அவர்கள் தேசிகர் என்றும் அழைக்கப்படலாயினர்.

தேசிகர் விளக்கம் :

edit

தமிழ் நிகண்டின்படி,தேசிகர் என்றால் குரு என்கிற பொருள்படும் பட்டமாகும். தேசிகம் என்பது திசைச்சொல். இறைவனுக்கு ஞான தேசிகன் என்றொரு பெயரும் உண்டு.ஆகவே குரு என்கிற பொருள்படும் மரபில் வந்த வழித்தோன்றல்கள் தேசிகர் சமூகத்தினர் என்று வழக்கில் மருவியது.இவர்கள் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டை சார்ந்த தமிழ் மரபினர் ஆவர்.

தேசிகர் என்னும் சமூகத்தினர், உண்மை சைவர்கள், உணவு சைவர்கள் மற்றும் பிறவி சைவர்கள். தற்போது சைவ உணவு உட்கொண்டு சைவ நெறியில் மட்டுமே வாழ்பவர்கள் என்று எண்ணுவது முறையல்ல.

பாரம்பரிய செய்தி :

edit

கயிலாயத்துடன் தொடர்புடையது ஆதி சைவசமயாச்சாரியார் என்கிற தேசிகர் சமூகம்.அதாவது இறைவன் கயிலாயத்தில் இருந்து இறங்கி பூலோகம் சென்று அருள்பாலிக்க வேண்டும் என்று தேவேந்திரனிடம் தன் அவாவினை கூறி அதற்கான இடம் தெரிவுசெய்தும், பரிவாரங்களை அனுப்பவும் என்று ஆணையிட, இறைவன் பரிபாலனம் செய்ய வேண்டும் என்பதற்காக தேவேந்திரன் ஏற்பாட்டின்படி தேவேந்திரனால் பூவுலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருஆரூர் எழுந்தருளும்போது

  1. தேவாதிதேவர்கள்,
  2. சிவபூதகணங்கள்,
  3. அடியார் பெருமக்களோடு,
  4. ஆதிசைவ சமயாச்சாரியார்களும் (என்கிற தேசிகர் சமூகத்தினர்),

இறைவனோடு திருஆரூர் திருத்தலம் வந்ததாக முன்னோர்கள் மூலம் புராணச் செவிவழிச் செய்தியாக இச்சமூகத்தினரைப் பற்றிய விபரங்கள் அறியப்பட்டு வருகின்றது.

பல்லாயிரம் ஆண்டுகளாக :

  • ஆதீன பரிபாலனம்
  • திருக்கோயில் பரிபாலனம்
  • மடாலய பரிபாலனம் / பண்டார சன்னதிகள் என்று அழைக்கப்படலாயினர்)
  • தம்பிரான்கள்

மற்றும் அதற்கு அடுத்த நிலையில் வாழ்ந்து வருபவர்கள்

  1. வேதாகம - சமயாச்சாரியார்களாக, பயிற்றுவிற்பன்னர்களாக
  2. சிவாச்சாரியார்களாக
  3. திருக்கோயில் அர்ச்சகர்கள், குருக்கள் ( என்று தற்காலத்தில் அழைக்கப்படுபவர்களாக )
  4. சுப,அசுப வைதீக விற்பன்னர்களாக
  5. சைவ சித்தாந்ததிகளாகவும்
  6. பண்ணிசைவாணர்களாகவும்
  7. திருக்கோயில் ஓதுவார்களாகவும்,
  8. பண்ணிசைவாணர்களாகவும்
  9. அடங்கன் முறையில் திருமுறையை வரிசை படுத்தியவர்களாகவும்,

இப்படியான உயரிய நிலையில் சைவ சமயம் சார்ந்த அனைவர்க்கும் இறையருளால், குரு நிலையில் இருந்து வழிகாட்டியாக வாழ்ந்து வருகின்றனர். இப்படி பல சைவசமயம் சார்ந்த பணிகளில் சைவ சமயீகளுக்கு உபதேச நிலையில் இருந்து நல்வழிப்படுத்தி வருகின்றனர் குறிப்பாக சைவ மடங்களில் கொலுவீற்றிருப்பவர்கள் - வேதாகம இதிகாச புராண தோத்திர சாத்திரங்களை அதன் சாராம்சம் நெறி பிறழாமல் திருக்கோயில், மடாலயம் வழியாக சைவசமய நெறிமுறைகளையும் கோட்பாடுகளையும் இவ்வுலகில் வாழும் மக்களிடம் விதைக்க வேண்டிய அருட்பணிகளை இறையறுலால் தொன்றுதொட்டு வழங்கி வருபவர்கள்.

மேலும் ஆதிசைவாச்சாரியார்களாக இருக்கும் தேசிகர் என்பவர் உபதேச பரம்பரையை சாரும். அதாவது சைவ சமய மரபுகளை சைவ சமயீகளுக்கு உபதேசம் செய்பவர்கள்.

ஆதீன பரிபாலனம்:

edit

திருக்கைலாயம் பரம்பரை தொடர்புடைய ஆதீன மரபுடைய பல ஆதீனகர்த்தர்களாக தொடக்கத்திலிருந்து, இன்றுவரை பல காலம் ஆதி சைவசமயாச்சாரியர்கள் ஆகிய தேசிகர்களே ஆதீன கர்த்தர்களாக கொலு வீற்றுவருகின்றனர்.

உதாரணமாக அவற்றுள் சில:

  • திருவாவடுதுறை ஆதீனம்
  • வேளாக்குறிச்சி ஆதீனம்
  • துழாவூர் ஆதீனம்
  • செங்கோல் ஆதீனம்
  • குன்றக்குடி ஆதீனம்

வேளாக்குறிச்சி ஆதீனம், துழாவூர் ஆதீனம் ஆகிய இவை இரண்டும் வழிவழியாக இல்லறதுறவு பூண்டவர்கள். இல்லற துறவு இறைவனின் அமைப்பாகும்.அதாவது வெள்ளை ஆடை உடுத்தி இல்லறத்தில் இருந்து ஆதீனமாக கொலுவிருப்பவர்கள். சைவ சமயம் சார்ந்த தீட்சா உபதேசம் பெற்று இல்லறதுறவுவாசிககளிடம் ஆசிகள் வாங்குவது,இல்லறவாசிகளுக்கு சிறப்பு என்பதை புலப்படுத்துவதாக இவ்வாறு அமைந்ததுதான் இறைவனின் கருணை.

தேசிகர் சைவசமய பணி:

edit

சந்தான குரவர்கள் வழியில் தேசிகர் சமூகத்தினர் - குரு ஸ்தானத்தில் ஆதீன, திருமடாலய பரிபாலனம், சிவதீட்சை என்று பல்வேறு வகையில் இருந்து சைவ சமயத்தின் பால் மக்களை வழிகாட்டி வருகின்றனர்

திருக்கோயில் பணியில் தேசிகர் சமூகத்தினர் அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.அதுபோல், சமயக்குரவர்கள் போல் இருந்து அவர்கள் காலத்திற்குப் பின்னர்,திருக்கோயில்கள் தோறும்,சென்று சைவ சமயத்தை வளர்த்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி பழங்காலம் முதல் இன்றுவரை தேசிகர் சமூகத்தினர்

  • திருமுறை ஓதுதல்,
  • திருமுறை ஓதுவித்தல்,
  • திருமுறை பயிற்சியளித்தல், 
  • திருமுறை சார்ந்த ஆக்கப்பூர்வ

பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிகர் சைவசமயமக்கள் பணி:

edit

சைவ நெறி மேலானது, ஆகவே அச்சைவநெறி சார்ந்த அனைத்து பணிகளிலும் தேசிகர் சமூகம் தம்மை அர்ப்பணித்து வருவதால் சைவ சமயத்திற்காகவே இச்சமூகம் படைக்கப்பட்டது என்று பண்டையகால அரசுப்பெருமக்கள்,ஜமீன்கள், நகரத்தார் இச்சமூகத்தினரை நாடி பல்வேறு வகையான உபதேசங்களை பெற்று தேசிகர் சமூகத்தினரை பல்வேறு வகையில் ஏற்றுப்போற்றி வந்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில்கூட சைவ வேளாளர்கள் மற்றும் நகரத்தார் இவர்களின் முன்னிலையிலே பல்வேறு சைவசமயம் சார்ந்த நிகழ்வுகளை செவ்வனே செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆம்.

திருமலைநாயக்கர் ஆட்சிக்கு முன் திருக்கோயில் பூஜைகளும் ஊர் நிர்வாகமும் தேசிகர்கள்,அபிஷேக பண்டாரம் என அழைக்கப்பட்டு அவர்களின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளன.தேர்வு செய்யப்பட்ட சில தேசிகர் குடும்பங்களிலிருந்து சிறு வயதிலேயே தேர்வு செய்து போதிய பயிற்சிகள் அனைத்தும் அளித்து உருவாக்கப்பட்டவர்கள் அபிஷேக பண்டாரமாயினர்.பலர் மதிக்கும் மாண்பும் பெருமையும் கொண்டிருந்தனர்.சான்றாக இராமேஸ்வரம் திருக்கோயில் பூஜை மற்றும் தீவின் முழுக் கட்டுப்பாடும் அபிஷேக பண்டாரம் வசமிருந்தது. திருமலை மன்னர் தனது குருவாக தேசிகர்களை ஏற்றுக் கொண்டு போதிய அளவு வசதிகள் செய்து தந்தாலும், பின்னர் நாயக்கரிடம் செல்வாக்கு பெற்வர்களால், இராமேஸ்வரம், பழனி, மதுரை,.. முதலான பல கோயில் மற்றும் ஊர் நிர்வாகங்கள் பறிக்கப்பட்டன..அப்போது பறிபோனவையே சில பூஜை உரிமைகள்.

பண்டாரம் விளக்கம்:

பண்டாரதிற்கு என்று இன்னொரு விளக்க சொல் உண்டு. அதாவது பண் + ஆரம் திருபு அடைந்து பண்டாரமாக மாறியிருக்கவும் வாய்ப்புள்ளதாக செவி வழிச்செய்திகளாக அறியப்படுகிறது. பண்டாரம் என்பது கருவூலம், அறிவுக்கருவூலத்தையே பண்டாரம் என்பர், அதையே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் நமது அறிவுக்கெல்லாம் மூலமாய் ஆதாரமாய் இருப்பதால் ஈசனையே "மூலபண்டாரம் வழங்குகின்றான்" என்று குறிப்பார்.

சைவ சித்தாந்தத்தின் "சந்தான குரவர்கள்" எழுதிய சைவ சித்தாந்த நூல்களை போற்றிப் பாடம் கூறிவந்தவர்கள் பண்டாரம் எனவும் அறியப்பட்டனர். "இவர்கள் சித்தாந்த சாத்திரங்களைப் பயின்று, அனுபவித்த நிலையில் கண்ட உண்மைகளை விளக்குவதற்காக எழுந்த நூல்களே பண்டார சாத்திரங்கள் எனச் சொல்லப்பெற்றன.

நிபுணத்துவம் :

edit

  1. சிவாச்சாரியார் என்பவர்கள் சிவ ஆகமங்களில் தனித்தன்மை கொண்டு விளங்குபவர்.அதாவது கோயில் சார்ந்த ஆகம விதிகள் சார்ந்த விஷயங்களில் மிகவும் தேர்ச்சிப் பெற்றவர்கள் அல்லது பாண்டித்தியம் ஆனவர்கள்.
  2. சமயாச்சாரியர்கள், ஆச்சார்யாதுவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

மேற்கண்ட இந்த இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் தேசிகர்.

பூர்வீகம் :

edit

தில்லைவாழ் அந்தணர்கள் எப்படி சிதம்பரத்தை பூர்வீகமாக கொண்டவர்களோ அவ்வாறே ஆதிசைவசமாச்சாரியார் திருவாரூரை பூர்வீகமாக கொண்டவர்கள்.

திருவாரூரிலிருந்து சிலர் வேதாரண்யம், திருவெண்காடு, திருநெல்வேலி என்று சைவ சமய பணிக்காக இடம் பெயரத்தொடங்கினர். பின்னர் திருவாரூரிலிருந்து வேதாரண்யம் வழியாக இலங்கையும், மதுரையை தாண்டி தெற்கு நோக்கி பல்வேறு ஊர்களுக்கும், சிறிது சிறிதாக பல திருக்கோயில் சார்ந்த ஊர்களில் அவ்வூர் மன்னன், ஜமீன், அல்லது சைவசமயஅறக்கட்டளையினர் வேண்டுகோளுக்கு இணங்கி சைவசமய பணிகளுக்காக சென்று சமயப்பணியுடன் கூடிய இல்வாழ்க்கையும், தம்வாழ்க்கை முறையாகவும் வாழ்ந்து வரலாயினர்.

கடந்த 300 வருடம் முதல் தற்போதுவரை:

edit

கன்னியாகுமரி முதல் காசிவரை பல்வேறு பகுதிகளுக்கும், இலங்கை,சிங்கை, மலேசியா, போன்ற வெளிநாடுகளிலும் சைவ சென்று தங்கி வாழ்ந்து, சைவ சமய குருவாக பரிபாலனம் செய்து சமய பணியாற்றிவருகின்றனர் வருகின்றனர்

கோத்திரம்:

edit

தேசிகர் சமூகத்தில் இடம்பெறுகின்ற கோத்திரங்கள் - தேவர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் சார்ந்த பெயர்களிலேயே இடம்பெறுகின்றது.

மக்கள் தொகை:

edit

1980-இல் 3000 தேசிகர் குடும்பங்கள் இருந்ததாக செவி வழி செய்தி. தற்போது 1000 குடும்பங்கள் வரை இருக்கலாம் என்று தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

தேசிகர்கள் பரிபாலித்த / பரிபாலிக்கின்ற மடங்கள்:

edit

தேசிகர் சமூகத்தில் தோன்றிய ஞானிகள் முனிவர்கள் அனுபூதிமான்களாக விளங்கி பல்வேறு காலங்களில் மன்னர்களின் ஆதரவோடு மடங்களை ஏற்படுத்தி சைவாசாரியார்களாக திகழ்ந்து உள்ளனர். தேசிகர் அடையாளங்களை தெரிந்து கொள்ள கிடைத்த தரவுகளின்படி மடங்கள் குறித்த விபரங்களை பதிவிட்டுள்ளோம்.

திருநெல்வேலி

  1. அழகிய நாயகர் மாளிகை மடம்
  2. கீழை மடம் (தெற்குவீதி)

கல்லிடைக்குறிச்சி

  1. வேளாக்குறிச்சி ஆதீன பிரதான மடம்

பாபநாசம்

  1. வேளாக்குறிச்சி ஆதீன மடம்

தென்காசி

  1. தத்துவப்பிரகாசர் மடம் (சீகாழி தத்துப்பிரகாசர் சிற்றப்பலநாடிகள் மாணவர் தத்துவப்பிரகாசம் நூலாசிரியா் தென்காசி கோவில் தோன்றுவதற்கு காரணமாக இருந்த மடம்)
  2. சாமிதேவ அகோர மடம்
  3. அழகிய சிற்றம்பல தேசிகர் மடம் ( தென்காசி தலபுரணம் இயற்றியவர் )

பண்பொழி

  1. கல்மடம்

களக்காடு

  1. தேசிகர் மடம்− 4

ராதாபுரம்

  1. தேசிகர் மடம்

கழுகுமலை

  1. செவ்வாய் மடம்

சுசீந்திரம்

  1. வேளாக்குறிச்சி ஆதீன மடம்

ஈசாந்திமங்கலம்

  1. திருவேந்திகாப்பு பூஜைமடம்

மதுரை

  1. மேலமடம்−வேளாக்குறிச்சி ஆதீனம் (ஆதீன சீடர்கள் மதுரை ஞானப்பிரகாசர் சமாதி உள்ளது மதுரை சிவப்பிரகாசர்−சிவப்பிரகாசம் உரை, அழகிய சொக்கநாத வரோதயன்−சிவபூசையந்தாதி)

தேனி

  1. சிற்றம்பலவாத்தியார் மடம்

துலாவூர்

  1. துலாவூர் ஆதீன மடம்

திருச்சி

  1. சிந்தாமணி ஆதித்தவார வேளாக்குறிச்சி ஆதீன மடம்

கொடுமுடி

  1. தத்புருஷ தேசிகர் மடம்

அன்னப்பன்பேட்டை

  1. தாயுமானசுவாமி மடம்−திருவாவடுதுறை ஆதீனம்

திருவாரூர்

  1. வேளாக்குறிச்சி ஆதீன மடம்
  2. வடக்குவீதி சிவபாதஹிருதயார் மடம்
  3. வேளாக்குறிச்சி ஆதீனம் அன்னதான கட்டளை சத்திரம் (முத்துசாமி ஐயர் இளமையில் சத்திரத்தில் தங்கியிருந்து கல்வி பயின்று சென்னை சென்று வழக்கறிஞர் பணியை தொடர்ந்து British இந்தியாவின் முதல் இந்திய நீதிபதி ஆனவர்)

திருப்புகலூர்

  1. வேளாக்குறிச்சி ஆதீன தலைமை மடம்

திருச்செங்காட்டங்குடி

  1. வேளாக்குறிச்சி ஆதீன மடம்
  2. தேசிகர் வசம் உள்ள மூன்று மடங்கள் 1)அறுபத்துமூவர் குருபூஜை மடம், 2)அம்பலக்கார மடம், 3)அகமுடையார் மடம்

வேதாரண்யம்

  1. பிரதோச மடம் - வேதாரண்யம் மேலவீதி - நிறுவனர் குமாரசாமி தேசிகர்
  2. கார்த்திகை மடம்
  3. திருவாதிரை மடம்
  4. செவ்வாய் மடம்
  5. உடையாமடம்

கோடியக்கரை

  1. மகாராஜபுரம் பெரியபண்ணை வேதநாயக தேசிகர் வகையறா சத்திரம்

பொறையார்

  1. கந்தசஷ்டி மடம்

திருமீயச்சூர்

  1. வேளாக்குறிச்சி ஆதீன மடம்

சீர்காழி

  1. கண்ணுடைய வள்ளல் மடம்

சிதம்பரம்

  1. வேளாக்குறிச்சி ஆதீன சீடர் − மறைஞானசம்பந்த முனிவர் கண்கட்டி குகை மடம்
  2. உலகமூர்த்தி தேசிகர் மடம் (முத்துகற்பக குருக்களையா)
  3. பச்சைகந்த தேசிகர் மடம்
  4. சத்தியோஜாத மடம்

காஞ்சிபுரம்

  1. ஈசான மடம்
  2. வாமதேவ மடம்

திருவண்ணாமலை

  1. மெளனகுரு பசுபதி ஆசாரிய சுவாமி மடம்

திருக்காளத்தி

  1. காளத்தி கண்ணப்ப பண்டாரம் மடம் (கண்கட்டி குகை மறைஞான சம்பந்தர் வித்யாகுரு)

எட்டையபுரம் கண்ணப்பர் மடம்

  1. மூர்த்தி பெயர் ஸ்ரீ காளத்திப்பர் ஞான பூங்கோதை அம்பிகை பூஜை.( எட்டையபுரம் ஜமீன்தார்களுக்கு பட்டம் சூட்டும் உரிமை தேசிகர் பாத்தியம். இதற்கான மரியாதை கழுகுமலை ஸ்ரீகழுகாசலமூர்த்தி த்வஜஹாரோஹன காலத்தில் தேசிகர்ளுக்கு முதல்மரியாதை. இங்கு தேசிகர்ளுக்கு ஜமீன் பட்டத்து குருக்களையா என்று பெயர் )

வேதஆகம பாடசாலை:

edit

தூத்துக்குடியில் கதிரேசன் கோவிலில் கதிர்வேல் வேதஆகம பாடசாலை தேசிகர்களால் நடத்தப்படுகின்றது.

இந்திய பாராளுமன்றத்தில் தேசிகர்களின் பங்கேற்பு:

edit

நாள் : 28-05-2023, ஞாயிற்றுக்கிழமை நிகழ்வு : இந்திய புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் வழங்கும் விழா

ஆதீனங்கள்: 1)திருவாவடுதுறை ஆதீனம் - 24 வது குருமகா சன்னிதானம் - ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 2)வேளாக்குறிச்சி ஆதீனம் - 18வது குருமகா சன்னிதானம் - ஶ்ரீலஶ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் 3)குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் - ஶ்ரீ பொன்னம்பல அடிகளார் அவர்கள் 4)துழாவூர் ஆதீனம் - ஶ்ரீலஶ்ரீ நிரம்பிய அழகிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 5)வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு திரு.அஜபா நடேஸ்வரன் சுவாமிகள் அவர்கள் 6)ஶ்ரீ மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் - தருமையாதீனம் ஓதுவாமூர்த்திகள்: 7)கரூர் திரு. குமார சுவாமிநாத தேசிகர் அவர்கள் 8)வயலூர் திருஞான. குமார பாலசந்திர தேசிகர் அவர்கள் 9) மயிலாப்பூர் திரு.பா.சற்குருநாத தேசிகர் அவர்கள் 10)கொடுமுடி திரு.லோக. வசந்தகுமார் தேசிகர் அவர்கள் மற்றும்: 11)துலாவூர் ஆதீனம் - பாரம்பரிய - திரு.ஜெயபாரத்

உலகில் சைவ நெறி மேலானது, அந்த சைவநெறிவாழ் சமயத்திற்கே குரு கடாட்சமாக விளங்க இறைவனால் அவதரிக்கப்பட்டவர்கள் - ஆதிசைவசமயாச்சாரியார் மற்றும் ஆதிசைவாச்சாரியார் என்கின்ற தேசிகர்கள்.

edit