Kalyanasundaram S

edit

(born 22.06.1941) is an Indian politician from Tamil Nadu. He is a Dravida Munnetra Kazhagam (DMK) party. He is the 'Thanjavur district secretary of the Dravida Munnetra Kazhagam மனைவிகள் கனகவள்ளி, புவனேஸ்வரி குழந்தைகள் சுமதி, உமா, முத்துச்செல்வன், சுந்தர்ராஜன், ஸ்ரீதர் 1952ல் பம்ப்ப்படையூரிலே பூமிதான இயக்கத்திற்கு மாநிலத்தின் முன்மாதரியாய் மாநில முதல்வர் இராஜாஜியை அழைத்து வந்து தனது சொந்த நிலத்தில் 2 ஏக்கரை தானமாக வழங்கிய வள்ளல் கு.சுந்தர்ராஜ் வன்னியருக்கு மகனாய் வாய்த்த சு.கல்யாணசுந்தரம் தன் தந்தையை போலவே தன்னையும் பொது வாழ்விற்கு அர்பணித்துக் கொண்டார். புலிக்கு பிறந்த்து பூனையாகுமா? தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கை ஏற்று, சாதிசமயமற்ற சமுதாயத்தை உருவாக்கிட தனது 16வது வயதில் குடந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் 1958 – 1959ல் பத்தாம் வகுப்பை துறந்து அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்த மாணவர் போராட்டத்திற்கு முன்னெடுத்து அரசியல் அடியெடுத்து வைத்தார். தனது 19வது வயதில் ஆரியபடைவீடு ஊராட்சியில் ஊராட்சிமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அரசியில் சமுதாய பணியை தொடங்கினார். தனது தந்தை குடந்தை ஊராட்சி ஒன்றியத்தில் முதல் ஒன்றிய பெருந்தலைவர். அவர்கள் சுவாமிமலை நாக்க்குடி வழியாக திருவைகாவூரை இணைப்பதற்கு சாலை வசதி கிடையாது. சு.கல்யாணசுந்தரம் அவர்கள் தந்தை இணைப்பு சாலை ஏற்படுத்துவதற்கு யாரிடமும் உதவி கேட்டு கிடைக்கப் பெறாமல் சுவாமிமலை அரசு மருத்துவமனை அருகில் வீட்டுமனை வாங்கி தன் பெயரில் பதிவு செய்து அதை இலவசமாக ஊராட்சி ஒன்றியத்திற்கு வழங்கி அதன் மூலமாக அந்த இணைப்பு சாலையை உருவாக்கிய சமுதாய சிந்தன்ன கொண்ட குடும்பத்தில் இருந்து சமுதாய பணி ஆற்றிட முன்வந்தவர். 1962ல் குடந்தை காங்கிரஸ் கோட்டை என்றிருந்த நேரத்தில் குடந்தை சட்டமன்ற தொகுதிக்கு கழக வேட்பாளர் தேர்விற்கு தனது தந்தை தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். அவரது எதிர்ப்பை மீறி கழகத் தலைமைக்கு மனு செய்தார் இருந்தும் கழகம் அறிவித்த வேட்பாளரை ஆதரித்து தனது தந்தையை மீறி கழகத்திற்காக கடும் பிரச்சாரத்தினை மேற்கொண்டார். 1967 சட்டமன்ற வேட்பாளர் தேர்விற்கு பாபநாசம் மற்றும் குடந்தை சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளராக மனு செய்தார். 1967ல் சந்திரசேகரபுரம் கூட்டுறவு வேளாண் அங்காடி இயக்குநர் பொறுப்புக்கு வந்து தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்குமே கூட்டுறவு மூலமாக சிறந்த விற்பனை செய்ய முடியும் என்பதற்கு 1970ல் அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப் பெற்றார். பின்னர் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டு சந்திரசேகரபுரம் கூட்டுறவு அங்காடி தமிழக அரசால் விரிவுபடுத்தப்பட்டு தமிழக அரசுக்கும், கூட்டுறவு அங்காடிகளின் மூலம் விற்பனை செய்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1971ல் பொருளாளர், 1974ல் துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளில் பணியாற்றினார். கும்பகோணத்தில் அந்த கூட்டுறவு பண்டகசாலைக்கான சொந்த கட்டிடம் விலைக்கு வாங்கி பல பிரிவுகள் விரிவுபடுத்தப்பட்டது. மேலும், ஊழலற்ற நேரடி கொள்முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வணிக பொருள்கான மளிகை, ஜவுளி மற்றும் உணவு, மருந்து பொருட்கள் லாபமற்ற நேரடி விற்பனைக்கு வழி செய்தார். 1974ல் குழந்தைகள் உணவு தட்டுப்பாடு நிலவிய நேரத்தில் வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட பொழுது அதனை தடுப்பதற்காக கொள்முதல் விலையில் குடும்ப அட்டை உள்ளோர்க்கு விநியோகிக்கப்பட்டது. 1970 முதல் 1975 வரை தமிழ்நாடு நிலவள வங்கியில் இயக்குநர் மற்றும் தலைவர் பொறுப்பிலிருந்தே விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விவாசய இடுபொருள்களான டிராக்டர், வண்டிமாடு மற்றும் ஆயில் மோட்டர் மற்றும் தஞ்சை மாவட்டம் முழுவதும் நிலம் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க வழிவகை செய்து கொடுத்துள்ளார். இவர் பொறுப்புக்கு வரும் முன்னர் வங்கி 40 ஆயிரம் கடனில் இருந்த்து. தனது பொறுப்பை விட்டு வரும் பொது வங்கி 4 லட்சத்திற்கும் அதிகமாக லாபத்தில் இயங்கியது. மேலும், இதற்கு இவரது நிர்வாகத்தில் சொந்த கட்டிடம் வாங்கி புதுப்பிக்கப்பட்டது. இவரது நிர்வாக காலங்களில் தஞ்சை மாவட்டம் முழுவதும் மத்திய அரசு திட்டமான ஆழ்குழாய் கிணறு பாசன திட்டத்திற்கான ஆயில் மோட்டார்கள் விவசாயிகளுக்கு மாநில அரசு மூலமாக வழங்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் முறையாக விநியோகிக்கப்படாமல் எஞ்சிய ஆயில் மோட்டார்களை அன்றைய முதல்வர் திரு.கலைஞர் அவர்களிடம் நேரடியாக எடுத்துக் கூறி எஞ்சிய ஆயில் மோட்டார்களையும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கே கிடைப்பதற்கு வழிவகை செய்தார். இவரது சிறந்த சேவையினை பாராட்டி மத்திய வேளாண் அமைச்சகம் இவரை கூட்டுறவு பயிற்சிக்காக ஜப்பான், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அரசு சார்பில் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலும் மத்திய அரசு சிறந்த கூட்டுறவு நிர்வாகி என்ற விருதையும் அளித்து கௌரவப்படுத்தியது. 1970களில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையம் மற்றும் கூட்டுறவு பால் சங்கத்திலும் குடந்தை வட்ட தலைவராக இருந்து பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் வாங்க வங்கிகள் மூலமாக கடன் உதவி பெற்றுத் தந்து பால் உற்பத்தியை அதிகரித்த்துடன் கிராமப்புறத்தில் சுய வேலை வாய்ப்பினை பெருகிட வழிவகை செய்துள்ளார். 1971-ல் கட்சி தலைமை சென்னையில் இருந்த சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கணபதியை பாபநாசம் வேட்பாளராய் அறிவித்து வெற்றி பெற்று அழைத்து வா என்று உத்தரவிட, அதன்படி செய்து கலைஞரின் நன்மதிப்பை பெற்றவர். 1975ல் எமர்ஜென்சி காலத்தில் தாடி வைத்து தலைமறைவாய் இருந்து அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டச் செயலாளர் மன்னையார் என்று அழைக்கப்பட்ட மன்னை நாராயணசாமி அவர்களுக்கு பல உதவிகள் செய்து கழகத்திற்காக கடும் இன்னல்களை சந்தித்தவர். எமர்ஜென்சிக்கு பிறகு துணிந்து குடந்தையில் கூட்டம் நடத்தியும், முதன்முதலாக தலைவர் கலைஞரை அழைத்து வந்து நிதியளிப்பு விழா கூட்டமும் நடத்திய தளபதிகளின் முதன்மையானவர். 1977ல் எமர்ஜென்சிக்கு பிறகு குடந்தை சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு நல்ல வாய்ப்பு இருந்தபோதும் நண்பரும், நகர செயலாளர் இரா.துரை கேட்டுக் கொண்டதற்கிணங்க வந்த வாய்ப்பையும் விட்டுக் கொடுத்தவர். 1981ல் திமுக விவசாய மாநில மாநாடு அவரது ஊராட்சியில் தமிழ்நாடே வியக்கும் வண்ணம் திரு.மன்னையார் அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் திரு.கோ.சி.மணி அவர்களுடைய ஆணைக்கிணங்க சீரும் சிறப்பாக தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடத்திக் காண்பித்தார். 1984ல் சட்டமன்ற தேர்தலில் குடந்தையில் போட்டியிட கட்சி தலைமை அனுமதி அளித்து தேர்தல் நெருங்கி வாக்கு சீட்டில் பெயரும், சின்னமும் வந்தும், கட்சி தலைமை, ஜனதா கட்சி கூட்டணிக்காக குடந்தையை விட்டு விலகி பாபநாசம் தொகுதியில் வேலை பார்க்க உத்தரவிட அதன்படியே செய்து கட்சிக்கு விசுவாசத்தைக் காட்டியவர் இருந்தும் இவருடைய பெயர் தேர்தல் ஆணையத்தினால் நீக்கப்படாத்தால் இவருடைய பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது. இவர் எந்த பிரச்சாரத்திகும் செல்லாமல் 13 ஆயிரம் வாக்குகள் இவர் பெற்ற நற்பெயருக்காகவே கிடைத்த்து. 1984ல் குடந்தை ஒன்றிய பெருந்தலைவராக அன்றைய ஆளுங்கட்சியினை எதிர்த்து அமோக வெற்றி பெற்று பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஒன்றிய தலைவராக பணியாற்றிய பொழுது இவரது பாதம் படாத பேரூர், ஊராட்சி மற்றும் குக்கிராமங்களே கிடையாது. குறிப்பாக பல கிராமங்களில் வயல் வறப்புகளாக இருந்த வழித்தடங்களை சாலைகளாக உருவாக்கிக் கொடுத்தவர். எடுத்துக்காட்டு (கல்லூர் ஊராட்சியிலிருந்து உத்தமதாணி ஊராட்சிக்கு சாலை வசதி இல்லாமல் இருந்த காலத்தில் மக்களுடைய கோரிக்கையை ஏற்று கல்லூர் – உத்தமதாணி சாலை இவரால் ஏற்படுத்தப்பட்டது.). மண்சாலைகள் தார் சாலைகளாகவும், (ஓ.டி.ஆர்) சாதாரண தார் சாலைகள் மாவட்ட சாலைகளாக (எம்.டி.ஆர்)-ஆக தரம் உயர்த்தப்பட்டது. கும்பகோணத்திலிருந்து பாபநாசம் செல்வதற்கு சுந்தரபெருமாள் கோவில் ஊரின் வழியாக உள்ளே செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனை தவிர்ப்பதற்கு சுந்தரபெருமாள்கோயில் – திருவலஞ்சுழி புறவழிச்சாலை ஏற்படுத்தப்பட்டது. அன்றைய காலத்திலேயே மகளிர் மேம்பாட்டிற்காக கிராமப்புற மகளிருக்கு சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் சுயவேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த திட்டத்திற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெரும் உதவி செய்தார். குறிப்பாக மங்க்கையர்க்கரசி தென்னை நாறு கயிறு திரிக்கும் திட்டம் மற்றும் தையல் பயிற்சி போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் திரு.ஷெட்டி ஐ.ஏ.எஸ் அவர்கள் திரு.எஸ்.கே அவர்களுடைய பணிகளை பாராட்டியுள்ளார். இவரே பிற்காலத்தில் மிக சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெயரை பெற்றவர் ஆவார். ஆரியப்படையூர் பழையாறு மற்றும் உடையாளுர் ஆகிய ஊராட்சிகளை இணைப்பதற்கு குறுக்கிட்ட 3 ஆறுகளான திருமலைராஜன், முடிகொண்டான் மற்றும் பாசன கால்வாய் ஆகியவற்றில் 3 பாலங்கள் இவரால் ஏற்படுத்தப்பட்டு சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. 1989ல் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக அன்றைய காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களை எதிர்த்து களம் இறக்கப்பட்டு மிக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருந்தும் தமிழ்நாடு முழுவதும் மூப்பனாருக்கு அவரது சொந்த ஊரிலே மிக கடுமையான போட்டியை கொடுத்தார் என்று கழக தோழர்களாலும் தலைவர் கலைஞர் அவர்களாலும் பாராட்டினை பெற்றார். 1991ல் மீண்டும் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு எதிர்பாராமல் நடந்த துயர சம்பவத்தினால் கழகம் சந்தித்த நெருக்கடியினை சந்தித்து மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார். 1996ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குடந்தை சட்டமன்றத்தில் போட்டியிட்ட அன்றைய மாவட்டச் செயலாளர் திரு.கோ.சி.மணி அவர்கள் வெற்றி பெற அயராது பாடுபட்டார். பின்பு வெற்றி பெற்ற பிறகு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதியாக திரு.கோ.சி.மணி அவர்களால் நியமிக்கப்பட்டு சட்டமன்ற தொகுதியில் அனைத்து பணிகளையும் முன்னின்று செயல்படுத்தினார். குறிப்பாக குடந்தை பேருந்து நிலையம், தாராசுரம் காய்கனி வணிக வளாகம், குடந்தைக்கென்று தனியாக வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டது. பட்டீஸ்வரம் ஊராட்சியில் இருந்த அரசு நடுநிலைப் பள்ளியினை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த பள்ளிக்குச் சொந்தமாக இடம் கிடையாது. அதனை பட்டீஸ்வரம் கோயில் நிலத்தினை ஆக்கிரமித்து வைத்திருந்தவர்களிடமிருந்து நீண்ட சட்ட போராட்டத்தினை நடத்தி பள்ளிக்கென்று தனி இடம் பெற்று புதிய கட்டிடம் கட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்தார். மேலும் தமிழ்நாட்டிலே முதன்முதலாக அரசு பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி பெற்றோர் ஆசிரியர் சங்கம மூலமாக அரசு உதவி இன்றி நடத்தப்பட்டது. அந்த பள்ளி கட்டிடம் அன்றைய கல்வி அமைச்சர் திரு.க.அன்பழகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு கல்வி அதகாரிகளிடம் ஒரு அரசு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பள்ளி இருக்கிறது என்ற பாராட்டிச் சென்றார். மேலும் பல்வேறு கல்வி அதிகாரிகள் பட்டீஸ்வரம் பள்ளியினை அரசு பள்ளிகளுக்கு உதாரணமாக இன்றளவும் எடுத்துக்காட்டாக சுட்டிக் காட்டுகின்றனர். 1998ல் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராக தலைவர் கலைஞர் அவர்களாலும் அன்றைய அமைச்சர் திரு.கோ.சி.மணி அவர்களாலும் நியமிக்கப்பட்டு மிக சிறப்பான கழகப் பணியினை 2002 வரை மேற்கொண்டார். அரசியல் வாழ்க்கையில் மாவட்டச் செயலாளராக இருந்த பொழுது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு குடும்ப நலன் கருதாமல் அரசியலில் பொது வாழ்க்கையில் தூய்மையை கடைபிடித்தார். தஞ்சை மாவட்டத்தில் முன்மாதிரியாக கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 2001ல் ஆரியபடை ஊராட்சியில் சமத்துவபுரம் ஏற்படுத்தினார். சமத்துவபுரம் கட்டுவதற்கு நீண்ட எதிர்ப்புகளை மீறி ஆற்றுக்கு அருகில் பள்ளமாக இருக்கிறது என்று அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தும் குறுகிய இடைவெளியில் பள்ளத்தினை இரவு பகல் பாராமல் மேடு உயர்த்தி அதே அதிகாரிகள் அரசிடம் வியப்பு தெரிவிக்கும் அளவிற்கு சிறப்பாக சமத்துவபுரத்தினை கொண்டு வந்தார். இன்றளவும் சமத்துவபுரம் எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் உட்படாமல் அந்த சமத்துவபுரத்தில் அரசின் பல்வேறு அலுவலகங்களும், இந்தியன் வங்கி கிளை, தபால் நிலையம் போன்றவை சிறப்பாக இயங்கி வருகிறது. 2001ல் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக களம் இறக்கப்பட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார். தஞ்சை பாராளுமன்ற வேட்பாளராக நின்ற திரு.எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் அவர்கள் 4 முறை வெற்றி பெற தேர்தல் களப்பணியாற்றினார். குறிப்பாக 2004 மற்றும் 2009 தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றினார். 2006ல் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் மாநில பெற்றோர் ஆசிரியர் துணைத் தலைவராக பணியாற்றி அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி வினாவிடை தொகுப்பு கிடைப்பதற்கு வழிவகை செய்தார். மேலும் பட்டீஸ்வரம் ஊராட்சியில் 240 கிலோவாட் மின்நிலையம் அமைவதற்கு பெரும் முயற்சி எடுத்து திமுக ஆட்சியில் நிதி உதவி மற்றும் ஒப்புதல் பெற்றாலும் அதற்கு பின் பொறுப்பேற்ற அதிமுக அரசு கடுமையான தடையினை எற்படுத்தியது. தன் பகுதி மக்களுக்காக மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்ற நல்ல நோக்கத்தினை தடுப்பதற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திய அரசுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னிறுத்தி தன் சொந்த செலவில் பலமுறை உயர்நீதிமன்றத்தை நாடி இன்று வெற்றிகரமாக மின் திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்.

'.